fbpx

செம குட் நியூஸ்..!! விவசாயிகளே இனி உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கொட்டப்போகுது..!!

பிஎம் கிசான் திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாகவே மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விவசாயிகள் விடுத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருகிறதாம். இதற்கான அதிகாரப்பூர்வம அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு இந்தாண்டு முதல் கூடுதலாக ரூ.3,000 சேர்த்து ஆண்டுக்கு ரூ.9,000 வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் மத்திய பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

ஆளுநர்கள் ரவி, தமிழிசைக்கு இப்படி ஒரு நோய் இருக்குதாம்!… அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

Tue Jan 30 , 2024
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், […]

You May Like