தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், குழந்தை பிறந்து முதல் 1,000 நாட்கள் வரையிலும் 5,294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 3 தவணைகளில் நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.
அதன்படி, முதல் தவணையாக 20, 28, 38-வது வாரங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், 6-வது மாதம் 500 ரூபாய் மற்றும் 24-வது மாதம் 500 ரூபாய் என மொத்தம் 3 தவணைகளில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் இந்த புதிய திட்டத்திற்கு 38.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை பிறந்து 2 வயது வரை குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.