உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நேற்று நடைபெற்றது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த திருவிழாக்களில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை என்றும் தேர்வு நடைபெற உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஏப்ரல் 29 மற்றும் மே 13ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.