fbpx

செம குட் நியூஸ்..!! நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும் ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் , அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது .

இந்தாண்டு நீலகிரி மாவட்டநிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை சார்பில் நடத்தப்படும் கோடைவிழா இன்று துவங்கியுள்ளது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் 12-வது காய்கறிகள் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 6ஆம் தேதியன்று துவங்கியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட பறவைகள் விலங்குகளின் உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

இதையடுத்து மே 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்பட்டது. மே 13 முதல் 15ஆம் தேதி வரை உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை இலட்சக்கணக்கான பல்வேறு வெளிமாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர். இந்நிலையில், புகழ்பெற்றஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. மே 19 முதல் 23 வரையிலான 5 நாட்களில் பிரசித்தி பெற்ற, மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் லட்சக்கணக்கான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பின்னர் மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகின்ற ஜூன் 3 ஆம் தேதியன்று பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்!... விலை ரூ.5 லட்சம்!... கின்னஸ் சாதனை!

Fri May 19 , 2023
உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ.5.23 லட்சம்) மதிப்பாகும். இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது […]

You May Like