இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட நிலையில், எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்ததால், தற்போது 8 எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அரசு வழங்கும் மானிய தொகையில் 13 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் எரிசக்தி மாற்ற குழுவின் அறிக்கையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிலிண்டர்களுக்கான மானியம் வழங்குவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.