சென்னை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் சார்பாக மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி சமுதாய வளைகாப்பு விழா கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசும் பொழுது
பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால், தானும் எம்எல்ஏ கணபதியும் சேர்ந்து ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவோம் என கடந்த 2023ஆம் ஆண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். மேலும், அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர் கேள்வி கேட்ட நிலையில், அவருக்கு சரியான பதிலை வழங்கிய கர்ப்பிணிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் என்ற திட்டத்தை கருணாநிதியின் பிறந்தநாள் அன்று தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழின் வளர்ச்சிக்காக குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் எனவும் அதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது எனவும் கூறினார்கள்.
மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாய்மார்கள் 4 வேளையும் உணவு அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பட்சத்தில் ஒரு கிராம் தங்க மோதிரம் இலவசம் என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் மட்டும் ஒரே ஆண்டில் 5,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Read More : மாநாட்டிற்காக நில உரிமையாளர்களை மிரட்டும் விஜய் கட்சியினர்..!! இதுதான் ஜனநாயகமா..? விளாசிய சீமான்..!!