உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்கள் ஆகிய 35 பொது பயன்பாட்டு பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் அறிவிப்பின் படி, ரேஷன் கடைகளில் இனி கோதுமை, அரிசி, சர்க்கரையுடன் வெல்லம், நெய், உப்பு, பேக் செய்யப்பட்ட உலர்ந்த பழங்கள், பேக் செய்யப்பட்ட இனிப்புகள், பால் பவுடர், குழந்தைகளுக்கான ஆடை (உள்ளாடை), ராஜ்மா, சோயாபீன், கிரீம், ஊதுபத்தி, சீப்பு, கண்ணாடி, துடைப்பம், பூட்டு, ரெயின்கோட் ஆகியவை விற்கப்படும். அதோடு வால் ஹேங்கர்கள், டிடர்ஜென்ட் பவுடர், பாத்திரம் கழுவும் பார், எலக்ட்ரானிக் பொருட்கள், சுவர் கடிகாரம், தீப்பெட்டி, நைலான், சணல் கயிறு, பிளாஸ்டிக் பைப் (தண்ணீர்), பிளாஸ்டிக் பக்கெட், குவளை மற்றும் வடிகட்டி போன்றவையும் நியாயமான விலையில் விற்கப்படும்.