fbpx

செம குட் நியூஸ்..!! ரூ.1,000 பணம் வங்கிக் கணக்கிற்கு வந்துருச்சாமே..!! உடனே செக் பண்ணுங்க..!!

பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம்தோறும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனவே, புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை உடனே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Chella

Next Post

அயோத்தி ராமர் கோவில் அருகே 'KFC'.? "கொஞ்சம் தள்ளி, சைவ கடையா போடுப்பா."! அதிகாரிகள் உத்தரவு.!

Wed Feb 7 , 2024
அயோத்திலுள்ள ராமர் கோவிலை சுற்றி 15 கிலோமீட்டருக்கு மது மற்றும் அசைவம் விற்பதற்கு தடை விதித்துள்ளது அயோத்திய நிர்வாகம். கேஎஃப்சி, அயோத்தியில் விற்பனை நிலையங்களை திறக்கலாம். எனினும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் ‘பஞ்ச் கோசி மார்க்’ எனப்படும் புனித பயணம் மேற்கொள்ளும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மது […]

You May Like