fbpx

செம குட் நியூஸ்..!! பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு தலா ரூ.2,500 ஊதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், தோட்டக்கலை உள்ளிட்ட 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால், ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர்.

இதையடுத்து ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.10,000-இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது..!! அப்போதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கியிருப்போம்..!! பிரேமலதா வேதனை..!!

Fri Jan 26 , 2024
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் இருந்து வருகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என 3 பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய […]

You May Like