fbpx

செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி..!! புதுச்சேரி அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதியை தவிர்த்து ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போலவே, புதுச்சேரி அரசும் அறிவித்திருந்தது. தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை அம்மாநில உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு சத்தான சிறுதானிய உணவுகள் மாலை நேர சிற்றுண்டியாக வழங்கப்பட உள்ளது எனவும், அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இந்த சிற்றுண்டி திட்டமானது புதுச்சேரியில் அனைத்து பிராந்திய அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

சென்னையில் ஏசியை திருடிய 2️ இளைஞர்கள் அதிரடி கைது…..!

Wed May 31 , 2023
சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர் 14வது தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரவீன்(31) இவரும் இவருடைய மனைவியும் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற சுற்றில் மாட்டி இருந்த குளிரூட்டியின் வெளிபாகம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர் அதனை […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like