fbpx

செம குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் 8ஆம் தேதி விடுமுறை என்றும் அன்றைய தினம் நடைபெற உள்ள அரசு தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அலுவலகங்களும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

யோகா விருதுக்கு மார்ச் 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Tue Mar 7 , 2023
யோகா 2023க்கான பிரதமரின் விருதுகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகாவின் மேம்பாடு மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தலைசிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இரண்டு தேசிய விருதுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டு சர்வதேச விருதுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும். 9-வது சர்வதேச யோகா தினமான ஜூன் 21, 2023 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த விருதுக்கான […]

You May Like