டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளதால், குஷியில் உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் அட்டவணை படி தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாத விடுமுறை நாட்கள் குறித்து இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, தான் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதைத்தவிர உள்ளூர் விடுமுறை, மழை காரணமாகவும் அவ்வபோது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளது. அதாவது, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சேர்த்தும், நடக்க இருக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை (டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை), கிறிஸ்துமஸ் (டிச.25) மற்றும் புத்தாண்டு விடுமுறையும் சேர்த்து மொத்தம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.