fbpx

செம பிளான்!… தீபாவளி பரிசு அறிவித்த அமித் ஷா!… இலவச ரேஷன்!… ரூ.450க்கு சிலிண்டர்!

ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலவச ரேஷன் பெறலாம். இதோடு, 450 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கும் திட்டத்தையும் பாஜக அறிவித்துள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 15 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 80 கோடி பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கையை பாஜகவின் ‘தீர்மானக் கடிதம்’ என்று கூறிய அவர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் அதிக பலன்களைப் பெறுவார்கள் என்றும், ஏற்கனவே கோதுமை, அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். ஆனால் இப்போது கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரையும் சேர்த்து கொடுக்கப்படும் என்ரு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.450க்கு தருவதாகவும் உறுதியளித்தார்.

Kokila

Next Post

அரசு உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு e-kyc கட்டாயம்...! 18-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும்...!

Mon Nov 13 , 2023
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு […]

You May Like