fbpx

இனி வெளிநாடுகளுக்கும் WhatsApp மூலம் பணம் அனுப்ப முடியுமா? புதிய சேவை விரைவில்…

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பு முறையை விரைவில் செயல்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது.

பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக வெறும் மெசேஜ் செய்யும் செயலியாக இருந்து வந்த இந்த வாட்ஸ் அப், கடந்த 2020ம் ஆண்டு முதல்முறையாக யுபிஐ சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

அதாவது, வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகமானது. இந்த வசதி முதலில் பீட்டா வர்சனில் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து வர்சனிலும் பயனில் இருக்கிறது. இதன் மூலம், வாட்ஸ் அப்பில் இருந்து பணம் அனுப்பலாம் மற்றும் பெற்றுக்கொள்ளலாம். இதனால், ஜிபே, போன்பே போன்று வாட்ஸ் அப் செயலிலும் பொருளாதர ரீதியாக பயன்பட்டு வருகிறது.

இருப்பினும், வாட்ஸ் அப் பேமெண்ட் சேவை மூலம் இந்தியாவுக்குள் மட்டுமே பணம் அனுப்பலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. இந்த நிலையில், யுபிஐ பேமெண்ட் மூலமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பும் முறையை விரைவில் செயல்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய தகவலின்படி, வாட்ஸ்அப் அதன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவை மூலம் சர்வதேச பேமென்ட் முறையை தொடங்க பரிசீலித்து வருவதாகவும், உள்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு அடுத்து, அதன் நிதி சேவைகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Baskar

Next Post

அதிர்ச்சி.! பயனர்களின் தகவல்களை ரகசியமாக கண்காணித்த FACEBOOK.! வெளியான பரபரப்பு ரிப்போர்ட்.!!

Wed Mar 27 , 2024
ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் அமேசான் பயனர்களை மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்கள் ரகசியமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டி புதிய ஆவணத்தை கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. டெக் க்ரன்ச் என்ற நிறுவனத்தின் தகவலின் படி 2016 ஆம் வருடம் பேஸ்புக் நிறுவனம் கோஸ்ட் பஸ்டர் என்ற ப்ராஜெக்ட் துவங்கி இருக்கிறது. இந்த புதிய ப்ராஜெக்ட் படி ஸ்னாப்சாட் செயலி மற்றும் அதன் சேவையகங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு இடையேயான […]

You May Like