fbpx

Fali Nariman: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!… இவரின் வாத திறமையால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

Fali Nariman: பிரபல சட்ட அறிஞரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 1971 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் அவர் பல முன்னணிதலைவர்களின் வழக்குகளை வாதிட்டுள்ளார். அவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மே 1972- ஜூன் 1975 வரை இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக 1999-2005 வரை இவர் இருந்தார்.

அக்டோபர் 17, 2014 அன்று, அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்காக ஆஜராகி, அவருக்கு ஜாமீன் பெற்றார், அது முன்பு நிராகரிக்கப்பட்டது. 1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில் மாதம் ரூ1 தான் ஊதியமாக பெற்றார் ஜெயலலிதா. ஆனால் 5 ஆண்டுகால முடிவில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகாலமாக நடந்து கடந்த 2014ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. அத்துடன் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவே அதிரும் வகையில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார் குன்ஹா.

இந்த வழக்கில் 22 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ஃ பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஃபாலி நாரிமன் செய்த சிறப்பான வாதங்கள் ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

English summary: Senior advocate Fali Nariman passes away

Readmore: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்..!! இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா..!!

Kokila

Next Post

வருகிறது கட்டுப்பாடு.! 'AI' பயன்படுத்துவதில் புதிய ஒழுங்குமுறை சட்டங்கள்.! தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவிப்பு.!

Wed Feb 21 , 2024
Artificial Intelligence(AI) தொழில்நுட்பம் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தில் இருக்கக்கூடிய அபாயங்களான டீப் ஃபேக் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகள் கவலையடைய செய்வதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். மேலும் ‘AI’ தொழில்நுட்பத்திற்கான ஒழுங்குமுறை வரைவு வருகின்ற ஜூன்-ஜூலை மாதங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற நாஸ்காம் […]

You May Like