fbpx

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்…

பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கம், பீகார் மற்றும் இரு மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அவரது இல்லத்தில் திரிபாதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை பிரயாக்ராஜில் நடைபெறும்.

கேசரி நாத் திரிபாதி மூன்று முறை உத்தரப் பிரதேசம் சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த பழம்பெரும் அரசியல்வாதி. ஜூலை 14, 2014 அன்று திரிபாதி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இரண்டு முறை பீகார் கவர்னராகவும், மேகாலயா மற்றும் மிசோரம் கவர்னராக கூடுதல் பொறுப்பிலும் இருந்தார்.

இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி, கழிவறையில் விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, திரிபாதி நேற்றைய தினம் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் இறந்ததாக கூறப்படுகிறது.

கேசரி நாத் திரிபாதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரதமரின் பதிவில் “ஸ்ரீ கேசரி நாத் திரிபாதி அவர்கள், சேவை மற்றும் அறிவாற்றலுக்காக மதிக்கப்பட்டவர். அவர் அரசியலமைப்பு விவகாரங்களில் நன்கு அறிந்தவர். உ.பி.யில் பாஜகவைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றிய அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Kathir

Next Post

திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நடிகர் விஜய்..!! சட்டமன்ற தேர்தலில் போட்டி..?

Sun Jan 8 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலுக்கும் வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக நடிகர் விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒவ்வொரு முறையும் வருங்கால முதல்வரே என்று விஜயை […]

You May Like