fbpx

திமுக மூத்த தலைவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காலமானார்!… “துடிதுடித்து போனேன்” முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கே. வேணு. இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார். 1989, 1996 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதியுடன் ஓராண்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் இவருக்கு கடந்த 2021ல் ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கும்மிடிபூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயர செய்தியை கேட்டு துடிதுடித்து போனேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மிசா நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை சென்ற போராளி கி.வேணு என புகழாரம் சூட்டிய ஸ்டாலின் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு வெளியேற வேண்டும்!… நாட்டை பாதுகாக்க தவறிவிட்டார்!… 80% மக்கள் கருத்து!

Sat Oct 21 , 2023
80 சதவீத இஸ்ரேலிய மக்கள், நாட்டை பாதுகாக்க தவறிய பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. […]

You May Like