சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இன்று 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் புஷ்பா நகரில் உள்ள முபாரக் உசைன் என்பவர் வீட்டிலும், நுங்கம்பாக்கத்தில் தர்ஷன் குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு இடங்களிலும் 5 முதல் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்குட்பட்ட இடங்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றம் எந்த அளவிற்கு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ’எதுக்கு வீடியோ எடுக்குறீங்க’..? டென்ஷன் ஆன நடிகை கனகா..!! தற்போதைய நிலையை பாருங்க..!!