fbpx

இது எங்கள் அடையாளம்..!! நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்..? விஜய் மீது பாய்கிறதா நடவடிக்கை..? பரபரப்பு புகார்..!!

தவெக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை கடந்த வாரம் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதிலிருந்தே பல பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தன. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் தெரிவித்திருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அஸ்ஸாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், கட்சிக் கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளை தவெக-வினர் அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும். எங்களது சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும். ஆனால், தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய், கட்சி கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். எனவே, விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : மறக்காம குலதெய்வ கோயிலுக்கு போங்க..!! என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

English Summary

The Bahujan Samaj Party (BSP) has filed a petition with the Election Commission objecting to the use of the elephant symbol in the flag.

Chella

Next Post

கரண்ட் பில் கட்டும்போது இனி கவனம்..!! புதிய உத்தரவை பிறப்பித்த மின்சாரத்துறை..!!

Wed Aug 28 , 2024
The Electricity Board has issued a new order regarding the payment of electricity charges above Rs.5,000.

You May Like