fbpx

Senthil Balaji | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..? சிறையிலிருந்து வெளியே வருகிறாரா..? இன்று தீர்ப்பு..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவாரா? ஜாமீன் கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, அதன்பின் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்றாலும் எம்எல்ஏவாக இருக்கிறார் என்றும் அதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளதாக கூறி அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English Summary : Will Senthil Balaji get bail today?

Read More : Lok Sabha தேர்தலுக்கு முன் அமலாகிறது குடியுரிமை திருத்த சட்டம்..!! மத்திய அரசு முடிவு..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

CSB வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம்...! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Wed Feb 28 , 2024
கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Channel Manager பணிகளுக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 12 முதல் 20 ஆண்டு […]

You May Like