தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அங்கே அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததை எதிர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் அமராக்கத்துறை சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நாளை மறுநாள் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது