fbpx

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இல்லையா..? திமுக-வின் ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான்..!! பரபரப்பை கிளப்பிய அரசியல் புள்ளி..!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு அங்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, மருத்துவ சிகிச்சை காரணமாக தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. இதற்கிடையே, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் தான் இருக்கிறாரா? என சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார். இது தொடர்பான ட்வீட்டில், திமுக-வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா? என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?

இந்த ட்வீட் பார்த்து பல உ பிஸ் எக்காளமிட்டு இவர்கள் வீரத்தை காகிதத்தில் காட்டுகின்றனர் இந்த அட்டை கத்திகள். 1975-77 நெருக்கடி நிலை சமயத்தில் கரைவேட்டி கட்ட தைரியமற்ற கோழைகள். 1976 ஜனவரி 30இல் இன்றைய முதல்வரின் தந்தை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது திமுக வினரால் என்ன செய்ய முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! இனி சனிக்கிழமைகளிலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் செயல்படும்..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Thu Jul 13 , 2023
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முக சுந்தரம் மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று அனைவரும் பணிபுரிய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அந்த வட்டாரப் […]
செம குட் நியூஸ்..!! இனி சனிக்கிழமைகளிலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் செயல்படும்..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

You May Like