fbpx

Senthil Balaji | புதிய மனு..!! செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு..!!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவில், ‘இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்’ என்று கோரியுள்ளார்.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வர இருந்தது. நீதிபதி அல்லி விடுப்பு காரணமாக, சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More : கிறுகிறுக்க வைக்கும் ராமநாதபுரம் தொகுதி..!! 5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுவும் ஏற்பு..!! அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!!

Chella

Next Post

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

Thu Mar 28 , 2024
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைதாகினார். அவரை 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, […]

You May Like