fbpx

இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் செந்தில் பாலாஜி..!! பதவிக்கு ஆப்பு வைக்கும் புதிய சிக்கல்..!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

தற்போது செந்தில்பாலாஜியிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அமைச்சராக ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது. எனவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Chella

Next Post

நீ என்கிட்ட பேசலனா அந்த வீடியோவ வெளியே விட்ருவேன்….! மிரட்டிய காதலன் கடைசியில் நடந்த ட்விஸ்ட்…..!

Tue Jun 20 , 2023
திருப்பூர் மாவட்டம்.பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (26) இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் பெண்ணை ஷாஜகான் காதலித்ததாக தெரிகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இவர்களுடைய காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like