சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி கோவையின் தேர்தல் களத்தை இயக்கி வருவது தெளிவாக தெரிகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சரவணம்பட்டி பகுதியில் பிரச்சாரத்துக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த விவகாரத்தில் சதி செய்து தனது பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறிவிட்டார். இதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் சமயத்தில் திமுக அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு மற்றவர்களை திருடன் என்கிறது. உண்மையான திருடன் திமுக தான் என ஆர்.எஸ்.பாரதி பேசுவதிலேயே தெரிகிறது.
கோவையில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களித்தால் தங்கத் தோடும், ரூ.2,000 பணமும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வருகிறது. நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலின் கருத்துக்கு பதில் அளித்த அவர், ”கமல் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயநினைவோடு தான் இருக்கிறாரா என்பதை அவர் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவுக்கு விற்றுவிட்டார்.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி கோவையின் தேர்தல் களத்தை இயக்கி வருவது தெளிவாக தெரிகிறது. கரூர் கம்பெனி ஆட்கள் என கூறுபவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர் சிறையில் இருந்து எழுதும் கதையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செயல்படுத்தி வருகிறார். மக்கள் இதை நன்கு அறிந்துள்ளனர். தங்கச் சுரங்கத்தை கோவையில் கொட்டினாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்பது உறுதி” என்றார்.
Read More : விவசாயிகளே..!! ரூ.2,000 எப்போது உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் தெரியுமா..? வெளியான குட் நியூஸ்..!!