fbpx

“செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது” உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு..!

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், செந்தி பாலாஜிக்கு எதிரான வழக்கில் மூன்று மாத காலத்தில் விசரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த மனுக்கள் மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “செந்தில்பாலாஜி விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல் ஏ பொறுப்பில் உள்ளதால், அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கூடிய அபாயமும், வழக்கின் விசாரணையிலும் முட்டுக்கட்டையாக இருப்பர் என்பதால் செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்க கூடாது” போன்ற பல்வேறு விஷயங்களை இந்த மனுவில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

செந்தில்பஜையின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது செந்தில்பாஜிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

Kathir

Next Post

#Breaking: மே 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி வழக்கு...! காத்திருக்கும் சிக்கல்...

Mon Apr 29 , 2024
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுதாரர் விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பண மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல் ஏ பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார் எனவே வழக்கின் சாட்சியங்களை […]
சிக்கிய செந்தில் பாலாஜி..! சீறும் உச்சநீதிமன்றம்..! அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கும் உத்தரவு..!

You May Like