அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜன.4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்பொழுது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடைய நீதிமன்ற காவல் அவ்வப்போது சட்ட நிலைப்படி நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய நீதிமன்ற காவலை ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 13-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.