சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் சீரியல் நடிகைகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த துணை நடிகை வைதேகி கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைய தயாரிப்பாளர்களும் பல படங்களில் அவர்களை கவர்ச்சி நடிகையாக நடிக்கவும் வைப்பார்கள். அதன் பிறகு சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து விட்டு ஒரு சில நடிகைகள் நல்ல கதை கொண்ட திரைப்படத்திற்காக காத்திருப்பார்கள். பெரும்பாலான நடிகைகளுக்கு எந்த ஒரு கதாபாத்திரமும் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் பணத்திற்காக விபச்சார வழக்கில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், சென்னை, வளசரவாக்கம் அன்பு நகரில் அப்பார்ட்மெண்ட் ஒன்று அமைந்துள்ளது. இங்கு உள்ள வீட்டிற்கு அறிமுகம் இல்லாதவர்கள் அடிக்கடி வந்து செல்வதை அந்த பகுதி மக்கள் கவனித்துள்ளனர். தொடர்ந்து புகாரளித்துள்ளனர்.
அதனையடுத்து ரகசியமாக விசாரித்த போலீஸார் அப்பார்ட்மென்ட் பகுதிக்குள் நுழைந்தனர். பல சினிமா நடிகைகளை வைத்து இந்த விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. படவாய்ப்பு இல்லாததால், இதில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்பின் இதனை செயல்படுத்தியவர் வைதேகி(50) துணைநடிகை என்பது தெரியவந்துள்ளது. சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் கடந்த 6 வருடங்களாக செய்துவருவதாக கூறப்படுகிறது. மேலும், கஸ்டமர் போல பேசிய போஸீலாரிடம், முன்னணி நடிகைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 ஆயிரம், துணை நடிகைகளுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும்.
முன்னணி நடிகை தான் வேண்டும் என்றால், ஒரு நாளுக்கு முன்பேயே ரிசர்வ் செய்ய வேண்டும். இப்போதைக்கு, தன்னிடம் ஒரே ஒரு துணை நடிகை மட்டும் இருக்கிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உடனே நடிகை வைதேகியை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், சினிமாவில் நடிக்க சான்ஸ் அவ்வளவாக கிடைக்கவில்லை. அதனால், முன்னணி நடிகைகளை வைத்து, இந்த 6 ஆண்டுகளாக சென்னையில் பாலியல் தொழில் செய்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.