fbpx

”உன் பொண்டாட்டியை எனக்கு செட் பண்ணி விடு”..!! ரூ.2 லட்சத்திற்கு டீல்..!! அடிக்கடி வந்துபோன ஆண்கள்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

தம்பி மகனை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை தனது ஆசைக்கு கொண்டு வர முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த G.நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – வள்ளியம்மாள் தம்பதி. மணிகண்டன் ஆட்டோ டிரைவராக இருந்த நிலையில், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது. மனைவி வள்ளியம்மாள் ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், மணிகண்டனின் பெரியப்பா நாகராஜ், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கும், வள்ளியம்மாளுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. வள்ளியம்மாளுக்கு ரூ.17 லட்சம் வாரி வழங்கி, புதிதாக வீடு ஒன்றையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் நாகராஜ்.

இந்நிலையில், திடீரென நமது உறவு இனி தொடர வேண்டாம். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனியும் நாம் உறவில் இருந்தால் நல்லதல்ல என்று நாகராஜிடம் கூறியுள்ளார் வள்ளியம்மாள். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், நாகராஜை கழட்டிவிட்ட பிறகு, வள்ளியம்மாள் வேறு சில ஆண்களுடன் கள்ள உறவில் இருந்து வருவதாகவும், அவரது வீட்டிற்கு அடிக்கடி சில ஆண்கள் வந்துச் செல்வதாகவும் நாகராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், நாகராஜ் வள்ளியம்மாளின் கணவன் மணிகண்டனை அழைத்து, உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன்.. ஏன் உன் மனைவி இப்படி செய்கிறார் என்று கேட்டுள்ளார். இதனால் மணிகண்டனுக்கும் நாகராஜுக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த நாகராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பழனி குமார் என்பவரை அணுகி நடந்ததை கூறியுள்ளார். அதற்கு ரூ.2 லட்சத்தை என்கிட்ட கொடு… மணிகண்டனை தீர்த்துக் கட்டிவிட்டு வள்ளியம்மாளை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் என கூறியுள்ளார்.

பின்னர், பேசியபடி பணத்தை கொடுத்துள்ளார் நாகராஜ். கடந்த 1ஆம் தேதி மணிகண்டனை அழைத்த நாகராஜ், பழனி குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஜி நாகமங்கலம் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று அதிகளவு போதையாக்கி, அருகில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளனர். பின்னர், மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தையும் கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து பழனிக்குமார் நாகராஜ் மற்றும் பழனிக்குருமாரின் நண்பர் ராஜ்குமார் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் உடல் தண்ணீரில் மிதந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனே வந்து உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருந்ததால், தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. மணிகண்டனின் செல்போன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நாகராஜ், பழனிக்குமார், ராஜ்குமார் ஆகியோர் சிக்கினர். விசாரணையில், அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தம்பி மகனை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை தனது ஆசைக்கு கொண்டு வர முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Read More : BIG BREAKING | செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!!

English Summary

The incident of killing the brother’s son and trying to bring his wife to his desire has created a lot of excitement in the region.

Chella

Next Post

உஷார்!. டூத் பிரஷ்களில் 600க்கும் மேற்பட்ட வைரஸ்கள்!. ஆய்வில் அதிர்ச்சி!

Thu Oct 10 , 2024
Study finds over 600 viruses on toothbrushes and showerheads, should you be worried?

You May Like