ஐபிஎல் 2024இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை இன்று (மே 1) எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முக்கிய வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அட்டவணையில் 8-வது இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த போட்டியில் KKR-க்கு எதிராக 262 ரன்களை எளிதாகத் துரத்தியதன் மூலம் அவர்களின் சாதனை வெற்றிக்குப் பிறகு உற்சாகமாக இருக்கும்.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் சந்தித்து கொள்வது இதுவே முதல் முறை. புதன்கிழமை (மே 1) போட்டிக்குப் பிறகு, இந்த இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) மொஹாலியில் மீண்டும் மோதுகின்றன. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு திரும்ப உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், 14 விக்கெட்டுகள் வீழ்த்திய முஸ்தஃபிசூர், அணியில் இருந்து விலகுவது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Read More : அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியவில்லையா..? இந்த பொருளை வாங்கினாலே போதும்..!!