கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பேரவூர் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. கனமழை காரணமாக சாலையின் எதிரே வரும் வாகனம் தெளிவாக தெரியாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து கண்ணூரில் உள்ள கல்லேரிராமமலை அருகே நிகழ்ந்துள்ளது. ஒரு பேருந்து மானந்தவாடியில் இருந்து கண்ணூர் நோக்கியும், மற்றொரு பேருந்து மானந்தவாடி நோக்கியும் சென்று கொண்டிருந்தது. வெளியான சிசிடிவி காட்சியில், இரண்டு கேரள மாநில கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதைக் காட்டுகிறது. இந்த விபத்து டிசம்பர் 2 திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் நடந்தது.
கனமழை மற்றும் மேக மூட்டம் ஆகியவை மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு பயணியின் நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், பேருந்தியில் பயணம் செய்த 34 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more ; காரில் இருந்தபடி ஆய்வு..? கோபத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்..!! பெரும் பரபரப்பு..!!