fbpx

சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை, மலம் வீச்சு..!! கொடூரத்தின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு..!! எடப்பாடி பழனிசாமி பகிரங்க எச்சரிக்கை..!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த சில பொருட்களை சூறையாடினர். மேலும், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள், கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிக்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டில் இன்று காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர், சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டியுள்ளதாக வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறை..!! வீட்டிற்குள் கழிவுநீரை ஊற்றி தாயாருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!! கொந்தளித்த அண்ணாமலை..!!

English Summary

A gang of 50 people broke into the house of journalist Savukku Shankar this morning, while his mother was alone.

Chella

Next Post

உடல் எடையை குறைக்க உதவும் நெய்.. இப்படி சாப்பிட்டா சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்.!!

Mon Mar 24 , 2025
Ghee: It is very easy to lose weight if you consume ghee like this.

You May Like