fbpx

பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரிக்க மும்பை கோர்ட் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

டி-20 கிரிக்கெட் இந்தியாவில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைதள பிரபலமான யூடியூபர் சப்னா கில்லுடன் மோதலில் ஈடுப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.

அதனைத் தொடர்ந்து, சப்னா கில் தன்னிடம் பிரித்வி ஷா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும் மானபங்கம் செய்தார் என்றும் குற்றம் சாட்டினார். சப்னா கில் மும்பை அந்தேரி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த கிரிமினல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷ்ஷ் சுரேந்திர யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்  பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார்களை விசாரிக்க மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், காவல்துறைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யாததற்காக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய சப்னா கில் மனுவை நிராகரித்து மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.சி. தெய்ட் உத்தரவிட்டார். 

Next Post

பெண்களுக்கான விசேஷ உணவுகள்...! தெரிந்து கொள்வது அவசியம்...!!

Thu Apr 4 , 2024
நோயின்றி ஆரோக்கியமாக வாழ, விசேஷ உணவுகள் குறித்து பெண்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும் அந்த காலத்து பெண்கள் சத்தான உணவுகளை உண்டு, கடுமையாக வேலைகள் செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஊட்டச்சத்து குறைவாக உள்ள ஜங்க் ஃபுட் எனப்படும் மிட்டாய் , பேக்கரி பொருட்கள், ஐஸ்கிரீம் , உப்பு நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி உண்பதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு, […]

You May Like