சென்னையில் வடமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தி.நகர் டாக்டர் பி.என்.ரோடு முதல் தெருவில் செயல்பட்டு வரும் ஸ்பா நிலையத்தில் வாடிக்கையாளர்களிடம் அழகிகளின் புகைப்படங்களை காட்டி விபச்சார தொழில் நடத்தி வருவதாக தேனாம்பேட்டை போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனால், சந்தேகமடைந்த போலீசாரும், நேற்று முன்தினம் காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போல், அந்த ஸ்பா நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ஸ்பா நிலையத்தில் இருந்த ஒருவர், இளம்பெண்களின் புகைப்படங்களை அவருக்கு காட்டியுள்ளார். மேலும், அழகுக்கு ஏற்றப்படி விலை பட்டியலையும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த காவலர், ஸ்பா நிலையத்தில் நடக்கும் பாலியல் தொழில் குறித்து உறுதி செய்து இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, அதிரடியாக ஸ்பா நிலையத்திற்குள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ராயப்பேட்டையை சேர்ந்த ஜாகீர் உசேன் (41) என்பவர் 11 வடமாநில இளம்பெண்களை வைத்து பெரியளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனால், போலீசார் ஜாகீர் உசேனை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திய செல்போன், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 11 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி 11 இளம்பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Read More : அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு கேடு..!! உயிருக்கு ஆப்பு வைக்கும் யூரிக் அமிலம்..? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!