விமானத்தின் கழிவறைக்குள் தம்பதிகள் உடலுறவு கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லூடனில் இருந்து இபிசா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈஸிஜெட் விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தம்பதியினர் உடலுறவு கொண்டிருந்த கழிவறையின் கதவை விமானத்தின் ஊழியர் ஒருவர் திறக்கிறார். அப்போது அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் கதவை வேகமாக மூடிக்கொண்டனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) நடந்துள்ளது. ஊழியர் கழிப்பறையின் கதவைத் திறந்ததும், விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு அந்த காட்சியை பார்த்துவிட்டனர். மேலும், அந்த செயலில் ஈடுபட்ட தம்பதியினரும், ஊழியர்கள் மற்றும் பயணிகளை பார்த்ததும் சிரித்துக் கொண்டே கதவை உடனடியாக மூடிவிட்டார்.
விமானத்தில் இருந்த பயணிகள் கழிவறைக்குள் இருந்த தம்பதியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு பெண் பின்னணியில் “Oh my f***ing God” என்று அலறுவது கேட்கிறது. கதவு திறக்கப்பட்டதும், தம்பதியினர் செயலில் ஈடுபட்டதை அனைவரும் பார்த்தனர். இந்த சம்பவத்தை ஈஸிஜெட் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானம் ஐபிசாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் விசாரணைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விமானத்தில் இருந்த பயணி ஒருவர் பதிவு செய்த வீடியோ குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோவை காண: https://x.com/Trip_McN33ly/status/1701300856706994662?s=20