மேரி கே லெட்டோர்னோ, இந்தப் பெயர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம். உலகின் மிக மோசமான ஆசிரியை என்ற பட்டத்தை பலர் மேரிக்கு வழங்கியுள்ளனர். அதற்கு காரணம் மேரி தனது 12 வயது மாணவனை திருமணம் செய்து கொண்டது தான். ஆசிரியர் பதவி என்பது மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது. பெற்றோருக்குப் பிறகு, குழந்தைக்குகளுக்கு கல்வி, வாழ்க்கை முறை, நற்பண்புகள் ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பது ஆசிரியர்கள் தான்.
எதிர்காலத்தில் ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக மாறும் என்பது பெரும்பாலும் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. ஆனால் ஒரு ஆசிரியர் தனக்கான வேலையை சரிவர செய்யவில்லை என்றால், பெற்றோரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியும். இவ்வாறு பொறுப்புமிக்க பணியை செய்யும் ஆசிரியர் ஒருவர் குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் வசிக்கும் விஜி ஃபுலாவ் என்பவர் 12 வயதாக இருந்தபோது, அவரது பெண் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். அதை விட ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆசிரியை அதே மாணவனை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். மேரி வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார் விஜி.
இந்நிலையில், ஆசிரியை மேரிக்கு விஜி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால், மாணவனுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அப்போது மேரிக்கு 34 வயது. அவர் ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்த விவரம் வெளிச்சத்திற்கு வந்ததும், மேரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், விஜியுடனான உறவை மேரி தொடர்ந்து வந்துள்ளார்.
விஜிக்கும் மேரிக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் 14 வருடங்களாக தம்பதியாக வாழ்ந்தனர். பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டனர். இல்லற வாழ்க்கையில் இருந்து விலகிய பிறகும், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2020இல் புற்றுநோயால் மேரி உயிரிழந்தார். அவர்களது உறவு குறித்து விஜி கூறுகையில், மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது தான் தான் என்றும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாக கூறினார்.