fbpx

’பாலியல் உறவை தவிர்ப்பது, மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்கு சமம்’..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால். இவருக்கு வயது 35 ஆகிறது. தன்னுடைய நண்பர் பர்னு என்பவருடன் சேர்ந்து, இவர் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தரவும், போலீசாரும் இது தொடர்பாக விசாரித்து, 2 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கந்து மற்றும் பர்னு மீதான குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், 666 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, கந்துவும், பர்னுவும் விடுவிக்கப்பட்டனர். இப்போது, கந்து ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். தன் மீது போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அதை வைத்து 666 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், இதனால் தனக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமல்ல ஜெயிலில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் லிஸ்ட் போட்டு சொல்லியிருந்தார்.

“ஜெயிலில் நான் நிறைய கஷ்டப்பட்டேன்.. பொருளாதார சூழலால், என் குடும்பத்தினரால், எனக்கு உள்ளாடை கூட வாங்கி தர முடியவில்லை.. ஜெயிலுக்குள் வெயில் அடித்தது.. குளிர் அடித்தது.. அதற்கேற்ற உடைகள் இல்லாமல் அவதிப்பட்டேன்.. சிறையில் தோல் தொடர்பான நோய் வந்துவிட்டது.. தலைவலி வந்துவிட்டது.. 666 நாட்கள் நான் சிறை சென்றதால் “மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக” மத்தியப்பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடியே 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஒரு பெண்ணையும் நாசம் செய்துவிட்டு, தனக்கான இழப்பீடும் வேண்டும் என்று இந்த நபர் கேட்டிருந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், இன்னொரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.. ஒரு தம்பதியிடையே பாலியல் உறவு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. இதனால், கருத்து வேறுபாடுகள் தம்பதிக்குள் அதிகரித்து வந்துள்ளது. அதாவது, திருமணமானது முதலே, பாலுறவை மனைவி தவிர்த்து வந்தாராம்.. இதுதான் வழக்கின் சாராம்சம்.

எனவே, கடந்த 2014இல் கணவர் கோர்ட்டுக்கு போய்விட்டார். தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு வழக்கும் தாக்கல் செய்தார்.. இது தொடர்பான விசாரணை நடந்தபோது, மனைவியின் தரப்பில், “பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா” என்ற நோய் இருப்பதாக வாதாடப்பட்டது.. அத்துடன் கணவருக்கு விவாகரத்து தர முடியாது என்றும் பதில் தரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய், மனைவி தரப்பின் வாதத்தை ஏற்கவில்லை. “சுயமாக தன்னுடைய கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பிறகும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார்.. இளம் தம்பதியர் மத்தியில் குடும்ப வாழ்க்கையில் பாலுறவு தவிர்க்க முடியாதது.. பாலுறவு என்பது இல்லற வாழ்க்கையின் அடித்தளங்களில் ஒன்று.

கணவன் – மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது. மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும்” என்றுகூறி, இருதரப்பு வாதங்களின் முடிவில், கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி. கணவன் – மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது, மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

Chella

Next Post

மதுரை முக்கிய இடத்தில் மீன் சிலையா??

Sat Jul 1 , 2023
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தின் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். அதை நினைவுப்படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் 1999-ல் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலை 1999-ல் அமைக்கப்பட்டது. கடந்த […]

You May Like