fbpx

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்.! எட்டு ஆண்டுகளுக்குப் பின் பரபரப்பு கிளப்பிய பெண்

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் மூவி நடிகர் மீது எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு அமெரிக்காவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் ஒருவர் அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேமி ஃபாக்ஸ் (55). இவர் காமெடி நடிகராகவும் பாடகராகவும் இருந்து வருகிறார். பிரபல இசை கலைஞரான ரே சார்லஸ் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ரே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கிராமிய விருது வென்ற இசைக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் டோ என்ற பெண்மணி ஜேமி ஃபாக்ஸ் இது பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதன்படி 2015 ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் உள்ள பார் ஒன்றில் வைத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக 8 ஆண்டுகள் கழித்து தற்போது பாலியல் புகார் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு எதிராக நியூயார்க் சர்வைவல் ஆக்ட் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் ஹாலிவுட் நடிகருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Next Post

'விசித்ரா சொல்வது பொய்’..!! ’விஜய் டிவி போட்ட பிளான்’..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Thu Nov 23 , 2023
தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இவர், தற்போது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், தனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார். அது […]

You May Like