fbpx

பாலியல் தொல்லை..!! நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் வெடித்த பூகம்பம்..!!

மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது. பல முன்னணி நடிகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்து விட்டதாகவும், அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளதாவது, “தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம்.

இதேபோல், தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : கேரவனில் ரகசிய கேமரா..!! நடிகைகளின் நிர்வாண காட்சி..!! பார்த்து ரசிக்கும் நடிகர்கள்..!!

English Summary

We Telugu film industry women welcome the Hema Committee’s report.

Chella

Next Post

ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மது விளம்பரம்..!! நீங்களே இப்படி செய்யலாமா..? சீறிய அன்புமணி ராமதாஸ்..!!

Sat Aug 31 , 2024
Anbumani Ramadoss has insisted that the Tamil Nadu government should take immediate action to remove the indirect alcohol advertisements placed on the Formula 4 car racing track.

You May Like