fbpx

லிஃப்ட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல்..!! 18 மாதங்களில் 11 கொலை..!! இறந்தவரின் காலை பிடித்து மன்னிப்புக் கேட்கும் தன்பாலின ஈர்ப்பாளர்..!!

பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கொலையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அங்குள்ள மணாலி ரோட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் சுங்கச்சாவடியில் தண்ணீர் மற்றும் தேனீர் சப்ளை செய்பவர் என்று தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் ராம் சரூப் (33) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 18 மாதங்களில் 11 பேரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஹோசியர்பூர் அருகில் செளரா என்ற கிராமத்தை சேர்ந்த ராம் சரூப், ஒவ்வொருவரையும் லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து அல்லது அவர்களிடமிருந்த பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கொலையான பெரும்பாலானோர் கழுத்தை துணியால் நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராம் கொலை செய்ததாக கூறப்படும் 5 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சிலரை கொலை செய்துவிட்டு அவர்களது முதுகில் துரோகி என்றும் எழுதி வைத்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான ராம், கூலி வேலைக்கு சென்று வந்தார். ஒவ்வொருவரையும் கொலை செய்த பிறகு அவரது காலை பிடித்து மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்வாராம்.

குடிபோதையில் ராம் அனைத்து உண்மைகளையும் தெரிவித்தார். ஆனால், கொலை செய்த யாரையும் தனக்கு நினைவு இல்லை என்று தெரிவித்திருக்கிறார். திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தந்தையான இவர், ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். எனவே, அவரது குடும்பத்தினர் இவரை கைவிட்டுள்ளனர். இந்நிலையில், போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Read More : மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.1,000 கிடையாது..!! தமிழ்நாடு அரசு வெளியிடப் போகும் ஜாக்பாட் அறிவிப்பு..!!

English Summary

An investigation conducted against him revealed that he had murdered 11 people in the last 18 months.

Chella

Next Post

Award: தமிழக அரசு வழங்கும் ஔவையார் விருது... 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...!

Thu Dec 26 , 2024
Tamil Nadu Government's Avaiyar Award... Apply by 31st

You May Like