சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் தனது மகனிடம் விசாரித்தபோது, பள்ளி தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மாணவனுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆசிரியர் தாக்கியது போன்று வழக்கை பதிவு செய்து ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ் ஆசிரியரால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக சிறுவன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வளவு நிகழ்வுக்கு பிறகும் ஆசிரியர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். எனவே, மாணவனுக்கு தொடர்பு பாலியல் தொல்லை கொடுத்து பிறப்புறுப்பு, ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டுமென பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, தமிழ் ஆசிரியர் சுதாகரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.