fbpx

”திருமண வாழ்க்கையில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குற்றமல்ல”..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு பெண் ஒருவர், தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், தனது கணவர் செய்த கொடுமையால் திருமண வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது. தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும், அதன் விளைவாக அவரது அந்தரங்க உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம் கணவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐபிசி பிரிவு 377-ன் கீழ் தண்டிக்க முடியாது எனவும் இந்த நாட்டில் திருமண பலாத்காரம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனைவிக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் போது, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு குற்றவியல் தண்டனை வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றம், மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி திருமண உறவில் ‘ இயற்கைக்கு மாறான குற்றம்’ நடைபெற இடமில்லை என குறிப்பிட்டது. மேலும், இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை நடந்ததாக எந்த மருத்துவ அறிக்கையும் கூறவில்லை எனக்கூறி அந்த நபரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

Chella

Next Post

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!! இப்படியொரு வாழ்க்கையா..? நேரில் பார்த்த பிரபலம்..!!

Sat Dec 9 , 2023
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகள் பலரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல நடிகை சுகன்யாவும் திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று தற்போது வரை 2-வது திருமணம் செய்யாமல் இருக்கிறார். திருமணம் என்றாலே வேண்டா வெறுப்பாக தான் பேசுகிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். நடிகை சுகன்யா, சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரசிகர்கள் பலரும் நடிகை […]

You May Like