ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனாவின் காரணமாக சில ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வந்திருக்கின்றார்.
இந்த நிலையில், தனது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் மாலையில் பைக்கில் வெளியே சென்ற நிலையில், இவர்களை பின்தொடர்ந்து பத்து பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். அப்போது நடுவழியில் இவர்களின் பைக்கை வழி மறித்து அந்த ஆண் நண்பரை அடித்து தாக்கி, பின்பு அந்த இளம் பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று, பத்து பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த நபர்கள் பெண்ணிடம் இருந்து செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். கூட்டு கும்பலால் 10 நபர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் மிகவும் சிரமப்பட்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.
அதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி குடும்பத்தாரிடம் கூறி, போலீசில் புகாரளித்தனர். பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதனை நடந்திருக்கிறது.