fbpx

அதிகாலை 4 மணிக்கு “ஷாருக்கானின் பாடிகார்டுகள்” ஹோட்டல் வரை காரை பின் தொடர்ந்தனர் -பிரியாமணி

பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் பிரியா மணிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி  தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மைதான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருகான் நடிப்பில் வெளியான தைவான் திரைப்படத்தில் பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தில் ஷாருகானுக்குடன் நடித்த அனுபவங்களை பிரியாமணி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “முதல் நாள் சூட்டிங்கிள் சார் உங்களை சந்திக்க விரும்புவதாக ஒருவர் வந்து கூறினார். அட்லீ சார்-னு நினைச்சு பாக்க போனோம். ஆனால் கூப்பிட்டது ஷாருகான் சார். எல்லாரும் ரொம்ப ஆச்சரியப்பட்டோம். ஷாருகான் படபிடிப்பின் போது பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார். சூட்டிங் முடிஞ்சு கிளம்பும் போது எல்லாரிடமும் தனித்தனியா பாய் சொல்லிட்டு போவாரு.

சென்னையில் அட்லீ சாரின் பிறந்தநாள் , நாங்கள் அனைவரும் பிறந்தநாள் விழாவிற்கு சென்றோம்.  விழா முடிஞ்சு அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து நாங்க தங்கி இருந்த ஹோட்டல்-க்கு வந்தோம். எங்கள் பாதுகாப்பிற்காக ஷாருகான் சார் ஹோட்டல் வரை பாடிகாட் அனுப்பிருந்தார்” எனத் தெரிவித்தார்.

Next Post

IPL 2024 | வருகிறது புதிய கட்டுப்பாடு.!! வீரர்கள் வர்ணனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.!!

Mon Apr 15 , 2024
IPL 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதன்படி ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் உடன் இணைந்த சமூக ஊடகவியலாளர்கள் ஆகியோர் போட்டி நாட்களில் மைதானத்தில் இருந்து படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் தான் […]

You May Like