fbpx

காலநிலை மாற்றத்தை விளக்கிய ஷேக்ஸ்பியர் கவிதை!… வைரலான ChatGPT பதில்!…

ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு ட்விட்டர் பயனர் ஒருவருக்கு கவிதை வடிவில் ChatGPT பதிலளித்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

GPT-4 என்ற ChatGPT-ன் புதிய அப்டேட்-ஐ சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன் சிறப்பே மல்டிமாடலிட்டி, உரை, படங்கள் மற்றும் ஒலிகள் போன்ற பல முறைகளில் கேள்விகளை புரிந்து கொண்டு செயல்படும் திறன் தான். உதாரணமாக ஒரு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தைப் படம் எடுத்து அனுப்பினால், அது என்ன படம் என்பதைச் சரியாக அடையாளம் காண்பதோடு மட்டும் அல்லாமல், உள்ளிருக்கும் பொருள்களைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்பது வரை ChatGPT-யால் சொல்ல முடியும்.

இது ஒருபுறம் இருக்க உலகம் முழுவதும் உள்ள ChatGPT பயனர்கள், இந்த கருவியின் செயல்திறனை அவ்வப்போது சோதித்து வருவதோடு, அதில் கிடைக்கும் சுவாரஸ்யமான பதில்களை தங்களது சமூகவலைதளபக்கங்களில் பதிவிட்டும் வருகின்றனர், அந்த வகையில் சமீபத்தில் டான் மில்லர் என்கிற நபர் ChatGPT-யிடம் ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ஷேக்ஸ்பியர் வடிவிலான கவிதை ஒன்றை ChatGPT பதிலாக கொடுத்துள்ளது. அதில் “Prithee, attend, thou gentle souls and wise. To hear a tale of warming in our skies. A change that doth the very earth beset. And causeth all in sundry ways to fret,” என எழுதப்பட்டிருந்தது. இதன் பொருள் “பிரிதீ, மென்மையான உள்ளங்களும் ஞானிகளும், எங்கள் வானத்தில் வெப்பமயமாதல் பற்றிய ஒரு கதையைக் கேட்க, பூமியையே சூழ்ந்து கொள்ளும் ஒரு மாற்றம், மற்றும் பல்வேறு வழிகளில் அனைவரையும் கவலையடையச் செய்கிறது.” என்பதே பொருள். 28 வரிகள் கொண்ட இந்த சுவாரஸ்யமான கவிதையை தனது ட்விட்டர் பக்கத்தில் டான் மில்லர் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே வைரல் ஆனதோடு, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Kokila

Next Post

அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் தொடர் மழை...! எந்தெந்த பகுதிகளில்...? வானிலை மையம் தகவல்...!

Mon Mar 20 , 2023
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி […]

You May Like