fbpx

ஷாம்பூகளில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் அதிகளவில் உள்ளது!… ஆய்வில் அதிர்ச்சி!

ட்ரை ஷாம்பூ ப்ராடக்டுகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கெமிக்கலான பென்சீன் அதிக அளவில் உள்ளது. இதனால் தலைமுடிக்கு எந்தமாதிரியான சேதங்கள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஹேர் வாஷ் இல்லாமல் தலை முடியை ரெஃப்ரெஷ் செய்து, சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பிரபலமான ஹேர் கேர் ப்ராடக்ட்டில் ஒன்று ட்ரை ஷாம்பூ. இது ஸ்ப்ரே அல்லது பவுடர் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்தும் பொழுது தலைமுடி மற்றும் மயிர் கால்களில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் துர்நாற்றத்தை போக்குகிறது. அடிப்படையில் ட்ரை ஷாம்பூ பயன்படுத்துவது தலைமுடியை சுத்தமாகவும், அடர்த்தியாகவும் காட்சியளிக்க செய்யும். ட்ரை ஷாம்பூவில் பல நன்மைகள் இருந்தாலும், அதில் ஒரு சில பக்க விளைவுகளும் உள்ளது.

மயிர் கால்களில் எரிச்சல் மற்றும் அலர்ஜி : ஒரு சில ட்ரை ஷாம்பூக்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் மயிர்க்கால்களை எரிச்சல் அடைய செய்யலாம் அல்லது அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதனால் சிவத்தல், அரிப்பு, எரிச்சல் உண்டாகும். மயிர்க்கால்கள் அடைக்கப்படுதல் : வழக்கமான முறையில் ட்ரை ஷாம்பூ பயன்படுத்தும் பொழுது அது மயிர்க்கால்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதனால் அழுக்கு, எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் வெளியேற முடியாமல் அடைபட்டு இறுதியாக வீக்கத்திற்கு வழிவகுக்கும். தலைமுடி மற்றும் மயிர் காய்களில் வறட்சி : எண்ணெயை உறிஞ்சுவதற்காக வடிவமைக்கப்பட்ட ட்ரை ஷாம்பூ தலைமுடி மற்றும் மயிர் கால்களில் இருக்கக்கூடிய இயற்கை எண்ணெய்களை அகற்றி விடுகிறது. இதனால் தலைமுடி வறண்டதாகவும், எளிதில் உடைய கூடியதாகவும் மாறுகிறது.

முழுமையற்ற சுத்தம் : ட்ரை ஷாம்பூ தலைமுடியில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெயை அகற்றுமே தவிர, பாரம்பரியமான ஷாம்பூ மற்றும் தண்ணீர் பயன்படுத்தி நாம் பெறக்கூடிய சுத்தத்தை அதனால் தர முடியாது. இதனால் தலைமுடியில் துர்நாற்றம், பாக்டீரியா வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமற்ற மயிர் கால்கள் போன்ற விளைவுகள் உண்டாகும். தலைமுடியின் நிறத்தில் மாற்றம் : ஒரு சில ட்ரை ஷாம்பூக்களை பயன்படுத்துவது தலைமுடியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக லைட் கலர்டு ட்ரை ஷாம்பூ பயன்படுத்துவது தலைமுடியில் வெள்ளை நிறத்தை விட்டு செல்லலாம். சுவாசக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் : ட்ரை ஷாம்பூவில் ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபர்கள் மற்றும் மெக்னீசியம் சிலிகேட் தூள் வடிவில் காணப்படலாம். இது சுவாசக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Kokila

Next Post

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வையுங்கள்!… இல்லையென்றால் 2 காதுகளும் கேட்காது!… அலட்சியம் வேண்டாம்!

Sun Sep 3 , 2023
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக படிப்படியாக காது கேளாமை ஏற்படுகிறது. இது இரண்டு காதுகளையும் சமமாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால் ஏற்படக்கூடிய காது கேளாமை பிரச்சனை பொதுவாக உரத்த ஒலி அல்லது இரைச்சல் மிகுந்த சூழலில் காது கேட்பதில் சிக்கல் ஏற்படுவதில் இருந்து துவங்குகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் நிரந்தரமாக காது கேட்காமல் போக வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் நமது தமனிகளில் படிப்படியாக படிவதன் காரணமாக […]

You May Like