fbpx

தமிழக காவல்துறையின் 31 வது தலைமை இயக்குனராக…..! பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்….!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நியமனம் செய்யப்பட்டவர் சைலேந்திரபாபு. அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

ஆகவே அந்த இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தலைமைச் செயலாளராக இருக்கின்ற இறையன்புவால் நியமனம் செய்யப்பட்டார்.

அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குனராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைமை இயக்குனரான ஷங்கர் ஜிவாலிடம் தன்னுடைய பொறுப்புகளை ஒப்படைத்தார் முன்னாள் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியில் சேர்ந்தவர் சங்கர் ஜிவால். இ.பி மெக்கானிக்கல் பட்டதாரியான இவர், கடந்த 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.

அதன் பிறகு சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அத்துடன் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குனர், திருச்சி மாநகர காவல் ஆணையர், உளவு பிரிவு டிஐஜி, ஐஜி சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

சிறந்த காவல் பணிக்காக கடந்த 2007 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் குடியரசு தலைவர் பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார். மேலும் இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற உள்ளது.

Next Post

முதலிரவில் கதறி துடித்த இளம்பெண்..!! பதறிய மாப்பிள்ளை..!! அழகான பெண் குழந்தை..!! குடும்பமே அதிர்ச்சி..!!

Fri Jun 30 , 2023
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு முன்பே தவறான உறவில் கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர். மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல இடத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் […]

You May Like