MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் பிரச்சனை நிறைந்த காலகட்டத்தில் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தப் பணிநீக்கத்தின் மூலம் 500-ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் . மேலும் இந்தப் பணிநீக்கத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் சம்பளம் வாங்குவோரை அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது நோட்டீஸ் பீரியட் காலத்திற்கான சம்பளம் மற்றும் MohallaTech கிளை நிறுவனங்களில் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 15 நாள் சம்பளத்தைக் கொடுக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.