fbpx

உலக அழகி போட்டியில் கலக்கிய ஷெரிகா திடீர் மரணம்..!! இப்படி ஒரு கொடிய நோயா..?

முன்னாள் உலக அழகி போட்டியாளர் ஷெரிகா டி அர்மாஸ், தனது 26 வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

ஷெரிகா டி அர்மாஸ் 2015இல் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார். ஆனால், அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை. இருப்பினும், அந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான ஆறு அழகிகளில் ஒருவராக இருந்தார். அந்த நேரத்தில் பேட்டி அளித்த ஷெரிகா, “எனக்கு எப்போதும் மாடலாக இருக்கவே ஆசை. பியூட்டி மாடலாகவோ, விளம்பர மாடலாகவோ, கேட்வாக் மாடலாகவோ இரகுக விரும்புகிறேன் என்றார்.

ஃபேஷன் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குப் பிடிக்கும். அழகுப் போட்டியில் எந்தப் பெண்ணின் கனவும் மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். சவால்கள் நிறைந்த இந்த அனுபவம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஷெரிகா தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருட்களையும் விற்பனை செய்யும் ஷே டி அர்மாஸ் ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்தினார்.

மேலும், கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் பெரெஸ் ஸ்க்ரிமினி அறக்கட்டளையுடன் இணைந்து சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தார். இந்நிலையில், தனது 26 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை எடுத்துவந்த ஷெரிகா டி அர்மாஸ், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிருக்குப் போராடி இறுதியில் மரணத்தைத் தழுவியுள்ளார். அவரது மரணம் உருகுவே மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

டிடிஎஃப் வாசனை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு..!! 3-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி..!!

Mon Oct 16 , 2023
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும், காயமடைந்த வாசனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். […]

You May Like