fbpx

பிரபல ஓட்டலில் ஷவர்மா, வீட்டில் மீன் குழம்பு..!! ஆசையாய் சாப்பிட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..!! சென்னையில் ஷாக்..!!

சென்னையில் ஒரு சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட உணவுகளை சமைப்பதாக புகார்கள் உள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், நூம்பல் பகுதியை சேர்ந்த 22 வயதாகும் சுவேதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர், போரூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் கடையில் சவர்மா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

பிறகு வீட்டுக்கு வந்தவர், மீன் குழம்பு சாப்பிட்டிருக்கிறார். மறுநாள் காலையில் சுவேதாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை சுவேதா உயிரிழந்தார்.

இதையடுத்து, சுவேதாவின் உடலை கைப்பற்றி மதுரவாயல் போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை சுவேதா, சவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : மைனர் பொண்ணு..!! பாய்ந்தது போக்சோ..!! நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

English Summary

He has eaten fish broth. The next morning Swetha is vomiting and dizzy.

Chella

Next Post

நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூர்யாவின் கங்குவா..! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Thu Sep 19 , 2024
Suriya's Kanguva to release on November 14..! Production company official announcement..!

You May Like